Sunday 21 February 2016

தினம் ஒரு சட்டம் - பொய் ஆவணங்களுக்கு தேவையான பொருட்களை வைத்திருந்தால் - 2


இ.த.ச 476 - பொய் ஆவணங்களுக்கு தேவையான பொருட்களை வைத்திருந்தால் இ.த.ச பிரிவு 467 கீழ் அன்றி


   யாராவது பொய்யாக உருவாக்கப்பட்ட ஒரு ஆவணத்திற்கு அல்லது கணினி சம்பந்தப்பட்ட ஆவணத்திற்கு அதிகாரப் பூர்வமாக உண்மையானது என தேவையான அச்சுகளையோ அல்லது வார்ப்புகளையோ அல்லது குறியீடுகளையோ போலியாக பதிப்பதும் அந்த ஆவணம் இ.த.ச பிரிவு 467 ஆவது பிரிவில் விளக்கப்பட்டுள்ள முறையில் அன்று வேறு ஒரு ஆவணத்தை பொய்யாக உருவாக்கி அதனை உண்மையான ஆவணமாக பயன்படுத்த வேண்டும் என்று உருவாக்குவதும் குற்றமாகும்,  

   அதற்கு தேவையான சாதனங்களையும், பொருட்களையும், குறியீடுகளை தம்வசம் வைத்திருப்பதும் அத்தகைய கருத்துடனும் எண்ணத்துடனும் வைத்திருப்பது குற்றமாகும்.

  இந்தக் குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் தண்டனை அத்துடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


Section 476- Counterfeiting device or mark used for authenticating documents or electronic record other than those described in Section 467, or possessing counterfeit marked material


   Whoever counterfeits upon, or in the substance of, any material, any device or mark used for the purpose of authenticating any *[document or electronic record], other than the documents described in Section 467 of this Code, intending that such device or mark shall be used for the purpose of giving the appearance of authenticity to any document or electronic record* then forged or thereafter to be forged on such material, or who with such intent, has in his possession any material upon or in the substance of which any such device or mark has been counterfeited, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.

1. Subs. by Act 21 of 2000, sec. 91 and Sch. I, for "any document" (w.e.f. 17-10-2000). 


குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

No comments:

Post a Comment