Sunday 29 March 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 106




       மரணத்தைப்பற்றிய அச்சத்தை உண்டாக்க கூடிய தாக்குதலிருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் நிரபராதியான மற்றோருவருக்குத் தீங்கு ஏற்பட்டாலும் அந்தச் செயல் குற்றமாகாது.

விளக்கம்
        A யைக் கொலை செய்யும் நோக்கத்துடன் ஒரு கூட்டம் தாக்க முற்படுகிறது. கூட்டத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யாமல் தப்பிக்க முடியாது. 
      அப்படித் துப்பாக்கி பிரயோகம் செய்யும் போது கூட்டத்தில் கலந்துள்ள குழந்தைகளுக்கு தீங்கு நேரிடலாம், தற்காப்புக்கென அந்தக் கூட்டத்தை நோக்கிச் சுடுவதால், அந்தக் குழந்தைகளுக்கு தீங்கு ஏற்பட்டாலும் A மீது குற்றம் சுமத்த முடியாது.

Section 106 in The Indian Penal Code
       
      Right of private defence against deadly assault when there is risk of harm to innocent person.—If in the exercise of the right of private defence against an assault which reasonably causes the apprehension of death, the defender be so situated that he cannot effectually exercise that right without risk of harm to an innocent person, his right of private defence extends to the running of that risk. 
 
 Illustration 
 
     A is attacked by a mob who attempt to murder him. He cannot effectually exercise his right of private defence without firing on the mob, and he cannot fire without risk of harming young children who are mingled with the mob. A commits no offence if by so firing he harms any of the children. 
 
[Source & Content http://indiankanoon.org/doc/1606852/]

1 comment: